Wednesday, 28 May 2014

செல்போன்களை செயற்கைக்கோள் போன்களாக மாற்றலாம்; சிக்னல் இல்லாத இடத்திலும் பேசலாம்

செல்போன்களை செயற்கைக்கோள் போன்களாக மாற்றலாம்; சிக்னல் இல்லாத இடத்திலும் பேசலாம்

satllite phone in androidசெல்போன்கள் நவீன வடிவம் பெறுவதுபோலவே, அதன் செயல்பாட்டு வேகமும் அதிரடியாக அதிகரிக்கப்போகிறது. நகரத்தை கடந்தால் பாதியாக குறைந்துவிடும் நெட்வொர்க் இணைப்புகள், காற்று வேகமாக அடித்தால் தொடர்பிழக்கும் இணைப்புகள் போன்ற பிரச்சினைகள் இனி இல்லை. மலைப்பிரதேசம், கடல்பயணங்களில் தொடர்பு கொள்ள முடியாத நிலையும் மாறப்போகிறது. ‘நெட்வொர்க்’ டவர் மூலம் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள்களின் வழியாக இணைப்பு கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது ஒரு கருவி.
ரஷியாவைச் சேர்ந்த ‘யாழினி’ செல்போன் நிறுவனம் இதற்காக ‘யாழினி பாயிண்ட்’ என்ற கருவியை வடிவமைத்துள்ளது. பெரிய செல்போன் அளவில் காணப்படும் இந்தக் கருவி எல்லா ஸ்மார்ட்போன்களையும் செயற்கைகோள் போன்களாக செயல்படச் செய்கிறது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் இதற்கான அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால் இந்த கருவி செயல்படத் தொடங்கிவிடும்.
இதற்கென தனியாக சிறிய செயற்கைகோளையும் இந்த நிறுவனம் விண்ணில் செலுத்தி உள்ளது. இதன்வழியே வினாடிக்கு 2 ஜி.பி. வேகத்தில் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும். இதுபோன்ற மற்றொரு கருவி அமெரிக்காவிலும் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க்-யை எப்படி பராமரிப்பது, எளிய வழிகள் இதோ..!


உங்கள் கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க்-யை எப்படி பராமரிப்பது, எளிய வழிகள் இதோ..!


how to hard disk repairகம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக் கையில், திடீரென “”ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்துவிட்டது. பைல்களை நீக்குங்கள்” என ஒரு அபாய எச்சரிக்கை நமக்குக் கிடைக்கும். இப்படிப்பட்ட நேரத்தில் நம்மில் பலரும், ஹார்ட் டிஸ்க்கில் இடம் பெற்றுள்ள தற்காலிக பைல்களை முதலில் நீக்குவோம். இதற்கு சி கிளீனர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்துவோம். அடுத்தபடியாக, நாம் அடிக்கடி பயன்படுத்தாமல், எதுக்கும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டு வைத்திருக்கும் பழைய சாப்ட்வேர் புரோகிராம்கள், அதிக நாள் விளையாடாமல் இருக்கும் கேம்ஸ், அல்லது விளையாடி சலித்துப் போன கேம்ஸ் என காலி செய்வோம். இவை அனைத்தையும் மேற்கொண்ட பின்னரும், ஹார்ட் டிஸ்க்கில் 10%க்கும் குறைவாகவே காலி இடம் உள்ளது என்ற செய்தி கிடைத்தால், என்ன செய்வது என்ற தலைவலி தொடங்கும். டிஸ்க்கின் டைரக்டரியைப் பார்க்கையில், நாம் இதுவரை காணாத போல்டர்கள் இருப்பதனைக் காணலாம். இதற்கு ஒரே தீர்வு, அனைத்து பார்ட்டிஷன் ட்ரைவ்களையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்து, எவ்வளவு இடம், எதற்காக கொண்டிருக்கின்றன என்பதனைக் காண்பதே ஆகும். இதனால் நமக்கு ஒவ்வொரு ட்ரைவாகவும், போல்டராகவும் சென்று, டிஸ்க்கின் இடம் சோதனை செய்திடும் நேரம் மிச்சம் ஆகும்.
இதற்கு உதவிடும் வகையில் நமக்குப் பல இலவச புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றின் தன்மைகளையும் சிறப்புகளையும் இங்கு காணலாம்.

ட்ரீ சைஸ் ப்ரீ (TreeSize Free):

இது மிகவும் பிரபலமான ஒரு புரோகிராம். சில விநாடிகளில், ஹார்ட் டிஸ்க்கில் எந்த ட்ரைவில், எந்த போல்டரில் அதிக இடம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது எனக் காட்டும்.H TreeSize-Get-Hard-Drive-Utilization-Reportபார் கிராபிக்ஸ் மூலம் ட்ரைவ்கள் எடுத்துள்ள இடம் காட்டப்படும். போல்டரில் கிளிக் செய்தால், அதே போன்ற வரைபடம் மூலம் இடம் காட்டப்படும். இடம் மட்டுமின்றி, பைல்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் வரைபடம் காட்டும் படி மாற்றி அமைக்கலாம். இந்த வரை படத்தின் குறியீடுகளுக்கான வண்ணத்தினையும் மாற்றி அமைக்கலாம். இவற்றின் அடிப்படையில் எந்த போல்டரில் அல்லது ட்ரைவில் உள்ள பைல்களை நீக்குவது என்ற முடிவை எடுக்கலாம். இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற, http://www.jamsoftware.com/treesize_free என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இங்கு மூன்று விதமான புரோகிராம்கள் தரப்படுகின்றன. இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது ஒன்று. யு.எஸ்.பி. மெமரி ஸ்டிக்கில் பதிந்து இயக்க; இன்னொன்று வேறு வகை மெமரியில் வைத்து எடுத்துச் செல்ல.

ஸ்பேஸ் ஸ்நிப்பர் (SpaceSniffer):

H SpaceSnifferஇதுவும் மிக வேகமாக இயங்கி, எந்த பைல் அல்லது போல்டர் அதிக இடம் பிடித்துள்ளது என்று காட்டும். இதனை ஒரு மேப் போல காட்டுவதால், மேலே சொல்லப்பட்ட ட்ரீ சைஸ் புரோகிராம் காட்டும், வரைபடத்தைக் காட்டிலும், வேகமாக நாம் தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம். எடுத்துக் கொண்ட இடத்திற்கேற்ற வகையில், ஒவ்வொரு ட்ரைவ் மற்றும் போல்டருக்கான பெட்டிகள் காட்டப்படுகின்றன. அதே போல், ஒவ்வொரு வகையான பைலுக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் பெட்டிகள் உள்ளன. மஞ்சள் வண்ணம் சிஸ்டம் பைல்களுக்கு, நீல வண்ணம் ஆர்க்கிவ் மற்றும் டிஸ்க் இமேஜ் பைல்களுக்கு என உள்ளன. நாமும் நமக்கு தெளிவாகத் தெரியும் வண்ணத்திற்கு இந்த கட்டங்களின் வண்ணத்தினை மாற்றி அமைக்கலாம். இந்த புரோகிராமினைப் பெற http://www.uderzo.it/main_products/space_sniffer/ என்ற முகவரிக்குச் செல்லவும். இந்த புரோகிராமினை எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். விண்டோஸ் எக்ஸ்பி முதல் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்குகிறது.

ரிட் நேக்ஸ் (RidNacs):

H Ridnacsஇது ட்ரீ சைஸ் புரோகிராமின் சிக்கலற்ற எளிய, புரோகிராமாக இயங்குகிறது. டிஸ்க் ட்ரைவ் அல்லது போல்டர் எடுத்துக் கொண்ட இடத்திற்கேற்ப கட்டக் கோடுகளை எண்ணிக்கையில் காட்டுகிறது. எந்த ட்ரைவினைச் சோதனை செய்திட விரும்புகிறோமோ, அதற்கான பட்டனில் கிளிக் செய்தவுடன் நமக்கு முடிவுகள் காட்டப்படுகின்றன. முடிவுகளை HTML/XML or CSV ஆகிய பார்மட்டில் சேவ் செய்து வைக்கலாம். இதனை http://www. splashsoft.de/Freeware/ridnacsdiskspaceusageanalyzer.html என்ற இணையதளத்தில் காணலாம். இதனை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியாது. மேலும் இது ஜெர்மன் மொழியில் உள்ளது. இருப்பினும் டவுண்லோட் செய்து பயன்படுத்துவதில் எந்த பிழையும் ஏற்படவில்லை.

ஸினார்பிஸ் (Xinorbis):

H Xinorbisஉங்கள் ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் எடுத்துக் கொண்டுள்ள இடம் குறித்து பலவகைத் தகவல்கள் வேண்டும் என விரும்பினால், ஸினார்பிஸ் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். பைல் வகை, துணைப் பெயர், பைல் உருவான வரலாறு, அளவு எனப் பலவகைகளில் பைல்கள் கொண்டுள்ள இடத்தினைக் காட்டுகிறது. இவற்றுடன் ஒரு ட்ரைவ் அல்லது பைலில் உள்ள மிகப் பெரிய பைல், போல்டர்களில் எது அதிக இடத்தைக் கொண்டுள்ளது போன்ற விபரங்களும் காட்டப்படுகின்றன. இன்ஸ்டால் செய்து பயன்படுத்தக் கூடியது மற்றும் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடியது என இருவகைகளில் இதனை டவுண்லோட் செய்திடலாம். இதனைப் பெற http://www.xinorbis.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

விண்டிர்சாட் (WinDirStat):

H Windirstatட்ரைவ் குறித்த அருமையான ட்ரீ தோற்றத்தை இந்த புரோகிராம் அளிக்கிறது. ஒவ்வொரு பைல் எடுத்துக் கொள்ளும் இடத்திற்கேற்ப, பெட்டிகளை அமைத்துக் காட்டுகிறது. பைல்கள் மற்றும் ட்ரைவ்கள், வண்ணங்களில் காட்டப்படுவது, தகவல்களைக் காட்சித் தோற்றமாகக் காட்டுவதாக அமைகிறது. இந்த வண்ணங்களையும் நம் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம். இதனை http://windirstat.info/download.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதில் எடுத்துச் சென்றுபயன்படுத்தும் வகையிலான புரோகிராம் இல்லை என்றாலும், PortableApps.com என்ற தளம் இதற்கான போர்ட்டபிள் புரோகிராம் ஒன்றைத் தருகிறது.
இணையத்தில் இன்னும் பல புரோகிராம்கள் இந்த செயல்பாட்டிற்கென கிடைத்தாலும், மேலே தரப்பட்டுள்ள புரோகிராம்கள், கம்ப்யூட்டர் பயனாளர்களிடையே மிகவும் பிரபலமானவை. நாம் எதிர்பார்க்கும் வகையில் இயங்கும் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.

Friday, 25 April 2014






Dongle ஐ Unlock செய்வது எப்படி என்று பார்ப்போம்.Dongle ஐ Unlock செய்வதற்கு கடைக்கு சென்றால்,எப்படியும் உங்களிடம் 250 ரூபாய் சேவை கட்டணமாக அரவிடுவார்கள்.அதை நான் இங்கு இலவசமாக சொல்லித்தருகிறேன்.
இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Mobitel ,Dialog, Etisalat) Dongle இனை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடை...ய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.
இதை http://www.bb5.at/huawei.php?imei*************** அப்படியே Copy செய்து, இதில் இருக்கும் * இற்கு பதிலாக உங்களுடைய IMEI Number யை கொடுத்து Address Bar இல் Paste செய்து கொள்ளுங்கள்.
இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.
அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.

Thursday, 27 March 2014

SAMSUNGமொபைல்


SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...!

1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.
2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.
3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.
4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.
5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).
6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.
7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.
8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.
9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.
10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.
11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.
12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.
13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.
14)#*3888# -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய.
15)#*5376# - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.
16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.
ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.

Friday, 7 March 2014

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)

1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்

https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118

http://www.indianbank.in/education.php

http://www.iob.in/vidya_jyothi.aspx

http://www.bankofindia.com/eduloans1.aspx

http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp

http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp

http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm


2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி

http://www.tn.gov.in/dge/

http://www.tnresults.nic.in/

http://www.dge1.tn.nic.in/

http://www.dge2.tn.nic.in/

http://www.Pallikalvi.in/

http://www.results.southindia.com/

http://www.chennaionline.com/results

3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய

http://www.tn.gov.in/dge


4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி

http://www.classteacher.com/

http://www.lampsglow.com/

http://www.classontheweb.com/

http://www.edurite.com/

http://www.cbse.com/

5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய

http://www.kalvisolai.com/

E-Payments (Online)


 E-Payments (Online)


1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி

http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx


2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி

http://www.rechargeitnow.com/

http://www.itzcash.com/


3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி

http://www.itzcash.com/

http://www.rechargeitnow.com/

E-டிக்கெட் முன் பதிவு

 E-டிக்கெட் முன் பதிவு

1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு

http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/

http://www.irctc.co.in/

http://www.yatra.com/

http://www.redbus.in/

2) விமான பயண சீட்டு

http://www.cleartrip.com/

http://www.makemytrip.com/

http://www.ezeego1.co.in/