வலைப்பூக்களில் கவனிக்க வேண்டிய தொழில்நுட்ப அம்சங்கள்
முன்னுதாரணமாக கொள்ள வேண்டிய தளம்:
Theme / Template
இது தான் அனைவரின் ஆரம்பம். இணையத்தில் தேடி எதோ ஒன்றை பிடித்து போடுவார்கள். ஆனால் இவை பெரும்பாலும் பக்க தரவிறக்க நேரத்தை பாதிக்கும். அதை விட பல coding பிழைகளையும் கொண்டிருக்கும்.எப்பொழுதும் Google தரும் Template களை Edit செய்து உங்கள் Blog இனை அழகாக்குங்கள்.
முன்னுதாரணமாக கொள்ள வேண்டிய தளம்: Google Official Blogs:
எவ்வளவு அழகாக உள்ளது. மிக மிக எளிமையாக வடிவமைத்து உள்ளார்கள். எந்த ஒரு பிழையையும் காட்டாமல் மிக நுட்பமாக உள்ளது. இவ்வாறு இருக்க காரணம் இப்பக்கத்துக்கு உலகம் முழுவதும் இருந்து தினமும் million வாசகர்கள் வருகிறார்கள். அவர்களின் தேவை தகவலே அன்றி அழகு அல்ல. இதை Google நன்றாக புரிந்து வைத்துள்ளது. இதை போல எளிமையாக வைத்து இருங்கள்.
Widget
திரட்டிகளின் இணைப்பு பட்டை, கடிகாரம், Radio, mp 3 player இவை எல்லாம் பயனற்றவை. அத்துடன் இவை பல Domains இல் இருந்து இயங்குவதால் பக்கத்தை பெரிதாக பாவிக்கும்.
Images:
பதிவுகளை எழுதும் போது படங்கள் தேவை என்றால் Google image இல் தேடுவது வழமை. ஒன்று , இரண்டு படங்கள் என்றால் copy - paste செய்யலாம். அதை விட அதிகம் என்றால் நிச்சயம் அவற்றை Download செய்து மீள Blogger இல் தரவு ஏற்றுங்கள்.நீங்கள் பொதுவாக விமர்சன பதிவு எழுதுபவர்களின் பக்கங்களில் கீழே செல்ல செல்ல படங்கள் தோன்றாது இருப்பதை காணலாம். இதுவே காரணம்.
Tracking service
Google Analytic பொதுவாக போதும். அதற்கு மேலே Stats counter, today hits இப்படி பல tracking செய்நிரல்களை இணைக்காதீர்கள். அண்மையில் Google புதிய ஒரு கட்டுப்பாட்டை விதித்தது. தீங்கான Script இணைக்கபட்ட வலைதளங்களை நீக்க ஆரம்பித்தது. முதலில் நீக்கி விட்டு சொல்லுவார்கள். Appeal செய்யலாம். அதிலும் Reject என்றால் நிரந்தரமாக அழிக்கபட்டு விடும்.
i- frame & embed objects
இவற்றை சுருங்க சொல்வதாயின் you tube video களை வலைப்பகுதியில் தோன்ற செய்யும் நடை முறை. பல widgets இல் அதிகளவு embed object - Flash காணப்படுகிறது. நிச்சயம் தேவையான இடங்களில் மட்டுமே பயன்படுத்துங்கள்.
Friend Connect
இப்போது இதுவே ஒரு பதிபவரின் பிரபலத்தை தீர்மானிப்பதாக கருதி கொள்கிறார்கள். ஆனால் இதற்க்கான ஆதரவு தருவதை Google நிறுத்தி நீண்ட காலம் ஆகிறது. இப்போது பெரும்பாலான வலை பக்கங்களில் இதுவே அதிகளவு HTML பிழைகளை காட்டுகிறது.
ஆனால் இதை நீக்க எவருமே விரும்ப மாட்டார்கள். இதற்கு மாற்றீடாக Feed to Email சேவையை பயன்படுத்தலாம்.
நீங்கள் மாற முதல் சில அம்சங்கள் :
நீங்கள் நிச்சயம் உங்கள் தளத்தை மீள அமைக்க வேண்டியது இல்லை. இப்போதைக்கு உங்கள் பக்கத்தில் என்ன குறைகள் இருக்கிறது என்று கண்டறிந்து நீக்குங்கள்.
இதை செய்ய மிக இலகுவான இரு வழிகள்:
1.Browser's Console:
- Fire fox short cut: Ctrl + Shift + K
- Chrome short cut: Ctrl + Shift + I
முதலில் உங்கள் பக்கத்தை உலாவியில் திறந்து பின்னர் இதில் உள்ள console பகுதியில் வலைப்பூவில் உள்ள சிக்கலான அம்சங்களை காணுங்கள். முடிந்தால் அவற்றை சரி செய்யுங்கள்.
2. Google Page Speed:
google.com/speed/pagespeed
Google தரும் இலவச வசதி. உங்கள் வலைப்பூ முகவரியை கொடுத்து analyze செய்து கொள்ளுங்கள். எங்கெல்லாம் பிழை உள்ளது, எப்படி இவற்றை சரி செய்யலாம் என்று விளக்கமாக சொல்வார்கள். நீங்களும் முயன்று பாருங்கள். அத்துடன் உங்கள் பக்க தரத்துக்கு புள்ளி போட்டு தருவார்கள்.
உங்கள் வலைப்பூவை முடிந்தளவு அழகாக்கி உங்கள் வாசகர்லுக்கு விரைவாகவும் அழகாகவும் செயன்றடைய செய்யுங்கள்.
No comments:
Post a Comment