Thursday, 14 March 2013

ஆன்ட்ராய்ட் போன்களில் புதிதாக வந்துள்ள Google Settings icon எதற்காக ?

ஆன்ட்ராய்ட் பயனர்கள் சமீபத்தில் இணையத்தை பயன்படுத்தி இருந்தால் அவர்கள் போனில் Applications பகுதியில் புதிதாக Google Settings என்றொரு icon வந்திருக்கும். இதை நாம் தரவிறக்கம் செய்யவில்லையே எப்படி வந்தது என்று நிறைய பேர் யோசித்து இருப்போம்.



 இது கூகுள் புதியதாக வெளியிட்டுள்ள ஒரு Extension. இதை நாம் Uninstall செய்ய இயலாது. இதை ஓபன் செய்தால் பெரும்பாலானவர்களுக்கு கீழே உள்ளது போல வரும். 

 இவற்றில் பல மற்ற ஏதேனும் ஒரு Application மூலம் நாம் பயன்படுத்துவதாக உள்ளது. உதாரணம் Maps & Latitude, Google+, Location, Search மற்றும் Ads போன்றவை (பலருக்கு ஒன்றிரண்டு மட்டும் இருக்கக் கூடும்). புதிதாக வந்துள்ள ஒரே வசதி Apps With Google+ Sign-in. சமீபத்தில் பேஸ்புக் போல மற்ற தளங்களில் Google Plus கணக்கை பயன்படுத்தி Sign in செய்யும் வசதி அறிமுகமானது. அப்படி நீங்கள் Sign-in செய்த தளங்கள்இதில் இருக்கும்.

 சரி இது என்ன செய்யும் என்று நீங்கள் கேட்டால், எதுவுமே செய்யாது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே உள்ளதாக நான் குறிப்பிட்டுள்ளவற்றை நீங்கள் Click செய்தால் அந்த குறிப்பிட்ட வசதிக்கு தான் நீங்கள் செல்வீர்கள். உதாரணமாக Maps & Latitude என்பதை கிளிக் செய்தால் கூகுள் மேப்ஸ் App Open ஆகும். இதை பார்த்து பயப்பட வேண்டாம் என்று சொல்லவே இந்த பதிவு. எனக்கு இந்த வசதி வரவில்லையே என்பவர்கள் கொஞ்சம் நாட்கள் காத்திருங்கள் வந்து விடும். உடனடியாக வேண்டும் என்பவர்கள் Settings >> Apps பகுதியில் Google Play Services என்பதை கிளிக் செய்து Clear Data கொடுத்து விட்டு ஒரு முறை உங்கள் போனை Off செய்து On செய்யுங்கள். இப்போது உங்கள் போனில் Internet வசதி இருந்தால் Google Settings Icon வந்து விடும்.

 - See more at: http://www.karpom.com

No comments:

Post a Comment