JavaScript Disable செய்து விட்டு வரும் பதிவு திருடர்களுக்கு நிரந்தர தீர்வு
பதிபவர்களின் நீண்ட ஏக்கம் தமது பதிவுகளை பிற பதிபவர்கள் பிரதி எடுப்பது அல்ல. தமது பெயரை குறிப்பிடாமல் பிரதி பிரதி எடுத்து பிரபல பத்திரிகைகள் பிரசுரித்து விடுகின்றனவாம். குறிப்பாக சினிமா விமர்சனங்கள்.
உண்மை தான். என்னுடைய தொழிநுட்ப பதிவுகளை கூட யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பத்திரிகை (இருப்பதே 3 தான்) வாரா வாரம் என்னை பற்றியோ அல்லது தளம் பற்றியோ எதுவும் குறிப்பிடாமல் வெளியிட்டார்கள். எனது நண்பர் சொல்லியே அந்த பத்திரிகையை வாங்கி படித்த போது பல மாதங்களாக இது தொடர்வது தெரிந்தது. காரணம் கேட்டதுக்கு திரட்டிகளில் இணைப்பது பதிபவர்களுக்கு சொந்தம் இல்லையாம். விடுவான நான்? தொடர் மின்னஞ்சல்) தாக்குதலின் பின் முன் பக்கத்தில் ஒரு நாள் மன்னிப்பு செய்தி பிரசுரித்தார்கள். இப்போது என் பெயருடனே முக்கிய பதிவுகளை வெளி இடுகிறார்கள்.
இது எனக்கு பெரிய இழப்பு இல்லை. ஆனால் கவிதை கட்டுரை என திட்டமிட்டு தமது திறமைகளை வெளிப்படுத்துபவர்களது ஆக்கங்களை திருடுவது அநாகரிகம். இன்று இலங்கையில் வரும் பல பத்திரிகைகள் வேறு நாட்டை சேர்ந்தவர்களது ஆக்கங்களை (கவிதைகள், கட்டுரைகள், சினிமா விமர்சனங்கள்) முகவரி இல்லாமல் பிரகிரிக்கின்றன. பாவம், இந்த விடயம் பதிபவர்களுக்கு தெரிவதில்லை. இதை தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாது. இலங்கை சட்டங்கள் இலங்கை ஆக்கங்களை மட்டுமே பாதுக்காகின்றன.
சரி தலைப்பிற்கு வருவோம். இதற்கும் மேலே சொன்னதிற்கும் சம்பந்தமே இல்லை. ஒவ்வொரு பத்திரிகையும் தமக்கென ஒரு இணைய பக்கத்தை கொண்டு இருக்கிறார்கள். இதை வடிவமைத்து பராமரிக்க தொழிநுட்ப வியலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எவ்வாறு நாம் பிரதி எடுப்பதை தடுத்தாலும் இலகுவாக அந்த வழிகளை உடைத்து விடுகின்றனர். இவர்களை எல்லாம் SOPA, PIPA கொண்டு தான் அடக்க முடியும்.
========================================================================
ஜாவாஸ்க்ரிப்ட் நிறுத்தி பிரதி எடுப்பது பற்றி அனைவருக்கும் தெரியும்.(இது தொடர்பாக முன்பு விரிவாக பார்த்து விட்டோம்.) இப்போது அதை எவ்வாறு தடை செய்வது என்பது பற்றி பார்போம்.
இதை இரண்டு விதமாக செய்யலாம்.
- எச்சரிக்கை செய்தியை காட்சி படுத்தல்.(பயனற்றது)
- பக்கத்தை தரவிறங்க விடாமல் தடுத்தல்.
இதன் அடிப்படை தத்துவம் உங்கள் பக்கம் தரவிறங்கும் கணனியில் JavaScript
இயக்கம் நிறுத்தப்பட்டால் உங்கள் பக்கம் வேறு இடத்திற்கு திருப்பி விடுதல்
ஆகும்.
1.பக்கம் தரவிறங்க விடாது தடுத்தல்:
இதற்கு உங்கள் டெம்ப்ளேட்டை எடிட் செய்ய வேண்டும். (வழமையான முறையில் blogger.com > template > edit HTML >செல்லுங்கள்)
- இப்பொது <head> என்ற வரியை கண்டு பிடியுங்கள்.
- அதன் கீழே இதை உடனடியாக பிரதி இடுங்கள்
No comments:
Post a Comment